எல்லையை காத்த 'எஸ் 400' - திருப்பி அடித்த ‛ஹார்பி' ட்ரோன்கள்

பாகிஸ்தான் நம் நகரங்களை குறிவைத்து அனுப்பிய ஏவுகணைகள், ட்ரோன்களை தடுத்து அழிக்க, ரஷ்ய தயாரிப்பான 'எஸ் 400' என்ற -வான்வழி பாதுகாப்பு கவச முறையும் முதல் முறையாக நேற்று பயன்படுத்தப்பட்டது.
சுதர்சன சக்கரம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஹிந்து புராணங்களில், பகவான் விஷ்ணு மற்றும் கிருஷ்ணர், சுதர்சன சக்கர ஆயுதத்தை வைத்திருப்பர். இது வேகமாகவும், துல்லியமாகவும், எதிரிகளை அழிக்கும் திறன் உடையதாக கருதப்படுகிறது. அதுபோன்ற வசதி கள் உள்ளதால், இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில், 36 வகையான தாக்குதல்கள் நடத்தப்பட்டாலும், அவற்றை தடுத்து அழிக்கும் திறன் இதற்கு உள்ளது. அந்தளவுக்கு சிறப்பு வாய்ந்த ரேடார் இதில் உள்ளது. தற்போது உல களவில் மிகவும் சக்திவாய்ந்த, அதிவீன நீண்ட துார வான் பாதுகாப்பு முறையாக இது உள்ளது.
இது, 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உள்ளது. மிக வேகமாகவும், மிக மெதுவாகவும் சென்று இலக்கை கண்டுபிடித்து துவம்சம் செய்துவிடும்.
இந்த பாதுகாப்பு முறை தற்போது முதல் முறையாக நம் படைகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து ஸ்குவாட்ரன்கள் வாங்க திட்டமிட்டு, மூன்று வந்துள்ளன. மற்றவை அடுத்தாண்டு வரும். ஒரு ஸ்குவாட்ரன் என்பது, 16 ட்ரோன்கள் அடங்கியது.
ஊடுருவி தாக்கும் இஸ்ரேல் ட்ரோன்
பாகிஸ்தான் நகரங்களை குறிவைத்து இந்தியா நேற்று ஏவிய ஹார்பி ரக ட்ரோன்கள் மிகவும் துல்லியமாக வேலையை முடிக்கும் ஆற்றல் கொண்டவை. ஆசியாவில் இது போரில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை. எதிரியின் ரேடார்களில் சிக்காமல், ஊடுருவி நுழைவது இதன் சிறப்பம்சம்.
இலக்கை தேடிப் பிடித்து, தேவைப்பட்டால் வானில் காத்திருந்து தகுந்த நேரத்தில் தாக்கி தகர்க்கக் கூடியது. பகல், இரவு எந்த நேரமாக இருந்தாலும், எந்த சீதோஷ்ண நிலையிலும் பயன்படுத்த முடியும். தொடர்ந்து, ஒன்பது மணி நேரம் வானில் வல்லது.
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு