தந்தை இறந்த நிலையிலும் தேர்வெழுதி சாதித்த மாணவி

அவிநாசி : சேவூர் அருகே புலிப்பார் ஊராட்சி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன், 43; இவரது மனைவி சுமதி, 42. இவர்களுக்கு முத்தமிழ் யாழினி, 17, தங்க மித்ரா, 15 என இரு மகள்கள் உள்ளனர்.

அவிநாசி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றியவர் கண்ணன். சேவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் யாழினி 12ம் வகுப்பும்,தங்க மித்ரா 10ம் வகுப்பு படித்து வந்தனர். பிளஸ் டூ பொதுத்தேர்வில்,செய்முறை தேர்வு நடைபெற்ற போது கண்ணன் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் டூ தேர்வு எழுதி 522 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். சோகமான சூழலிலும், படிப்பில் கவனம் செலுத்தி இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்ற முத்தமிழ் யாழினியை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement