பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி: கள்ளக்குறிச்சி, 37வது இடம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்தாண்டு பிளஸ், 2 பொதுத்தேர்வில், 92.91 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்தாண்டு, 90.96 சதவீதம் தேர்ச்சி பெற்று, 37வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள, 124 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த, 9004 மாணவர்கள், 9307 மாணவியர் என மொத்தம் 18,311 பேர் தேர்வு எழுதினர்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 8,770 மாணவியர், 7,886 மாணவர்கள் என மொத்தம் 16,655 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 90.96 ஆகும்.

இது கடந்தாண்டைவிட, 1.95 சதவீதம் குறைவு. இதில் செல்லம்பட்டு, செங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிகள், சித்தால், பெரியசிறுவத்துார், அ.குமாரமங்கலம், ஜி.அரியூர், மாதிரி பள்ளிகள், கள்ளக்குறிச்சி மாவட்ட எலைட் மாதிரி பள்ளி ஆகிய, 7 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மேலும், 25 தனியார் பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 32 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

மொழிப்பாடத்தில் 97.77 ; ஆங்கிலத்தில் 97.07; இயற்பியல் 98.54; வேதியியல் 97.72; உயிரியல் 98; தாவரவியல் 97.34, விலங்கியல் 98.02; புள்ளியியல் 100; கணினி அறிவியல் 99.18; கணிதம் 98.54; வணிகவியல் 96.75; கணக்கு பதிவியல் 93.60; பொருளியல் 96.66; சதவீதம் என பாட வாரியாக அதிகளவில் மாணவர்கள் உயர் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் மொத்தம் உள்ள, 38 மாவட்டங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்தாண்டு,

92.91 சதவீதம் பெற்று 29 இடத்தில் இருந்தது. இந்தாண்டு ,1.95 சதவீதம் குறைந்து, 90.96 சதவீத தேர்ச்சி பெற்றதால்,

37வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தேர்ச்சி அதிகரிக்க நடவடிக்கை



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த, 2,351 பேர், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வெழுத

அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை வெகுவாக குறைகிறது. கடுமையான கட்டுப்பாடுகளால், மாணவர் வருகையை அதிகப்படுத்தி, ஆண்டின் துவக்கமான ஜூன் மாதமே வார மற்றும் மாத தேர்வுகள் தொடர்ந்து நடத்தி, இனிவரும் ஆண்டுகளில் தேர்ச்சி சதவீதம் கட்டாயம் உயர்த்தப்படும். குறைந்த மதிப்பெண் பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கார்த்திகா,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

Advertisement