கள்ளக்குறிச்சியில் வேல் வழிபாடு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த வேல் வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரையில், ஹிந்து முன்னணி சார்பில் வரும் ஜூன் 22, ல் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், பாரத மாதா நுாலகத்தில், வேல் வழிபாடு நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், பாலகிருஷ்ணன், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். வழிபாடுகளை ஹிந்து வியாபாரிகள் நல சங்க நகர செயலாளர் முத்துராமலிங்கம் மேற்கொண்டார்.
இதில் தலைமை தாங்கிய மாநில செயலாளர் மனோகர் பேசியதாவது:
தனி மனிதனின் ஒழுக்கமே நம் சமுதாயத்தின் ஒழுக்கம். நாம் இப்போது பக்தி வாய்ந்த ஹிந்துக்களாக இருக்கிறோம். சக்தி வாய்ந்த ஹிந்துக்களாக இருந்தால் தான் நம் சமுதாய மக்களை காக்க முடியும்.
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில், 5 லட்சத்திற்கு அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். நம் மாவட்டத்திலிருந்து அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மணிவண்ணன் நன்றி கூறினார்.
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு