கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று 'அசத்தல்' உயிரியியல் பிரிவில் சாதனை

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 தேர்வில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று பெற்று அசத்தியுள்ளனர்.
அரசு பொதுத் தேர்வுகளில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி மாணவ மாணவியர் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்று தொடர்ந்து அசத்தி வருகின்றனர். அதேபோல் இந்த கல்வியாண்டிலும் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் உயிரியியல் பிரிவில் மாணவர் ஞானசூரியா 600க்கு 593 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
இவர் பாடவாரியாக தமிழ் 99, ஆங்கிலம் 98, கணிதம் 100, இயற்பியல் 100, வேதியியல் 100, உயிரியல் 96 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மாணவி சிந்துஜா 592 மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளார். இவர் தமிழ் 99, ஆங்கிலம் 97, கணிதம் 100, இயற்பியல் 99, வேதியியல் 97, கணிப்பொறி அறிவியல் 100 பெற்றுள்ளார். இவர்களை தொடர்ந்து மாணவர்கள் சந்தோஷ், மணிமாறன், மாணவி தேவதர்ஷினி ஆகியோர் 590 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் பள்ளியில் 590க்கு மேல் 5 மாணவர்களும், 580க்கு மேல் 21 பேர், 570க்கு மேல் 34 பேர், 550க்கு மேல் 94 பேர், 500க்கு மேல் 250 பேர், 450க்கு மேல் 416 பேர், 400க்கு மேல் 554 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளியில் 99 சதவீதம் பேர் சேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கணித பாடத்தில் 17 பேர், இயற்பியல் 2, வேதியியல் 8, உயிரியியல் 2, கணினி அறிவியல் 28, கணக்குபதவியல் 1 என மொத்தம் 58 பேர் 'சென்டம்' மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த பள்ளி மாணவ மாணவியர் மற்றும் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் சாதனை புரிந்த மாணவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளியின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது; மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கைக்கேற்ப ஆசிரியர்களின் கடின உழைப்பால் ஒவ்வொரு ஆண்டும் இலக்குடன் வெற்றியுடன் அடைந்து வருகிறோம். கல்வி தரத்தை மென்மேலும் பல மடங்குகள் உயர்த்தி மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையிலான அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
டில்லி இந்தியா கேட் பகுதிகளில் மக்களுக்கு தடை; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா