விளையாட்டு விடுதி தேர்வு போட்டி

கள்ளக்குறிச்சி: விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டியில், பள்ளி மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விளையாட்டு விடுகளில் சேருவதற்கு பள்ளி மாணவியர்களுக்கான, மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தன.

இதில்,7,8,9 மற்றும் 11ம் வகுப்பு பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர். கூடைப்பந்து, கபடி, ஹாக்கி, கால்பந்து மற்றும் தடகள போட்டிகளுக்கான தேர்வு நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் பாலாஜி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர்கள் ஹரிஹரன், வீரமுத்து, பாலுசாமி, உற்கல்வி ஆசிரியர்கள் தனசெல்வம், சாமிதுரை, ஆதி, பயிற்சியாளர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு திறனை அடிப்படையாக கொண்டு மாணவியரை தேர்வு செய்தனர்.

இதில் தேர்வான மாணவியர், மாநில அளவிலான தேர்வு போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Advertisement