ரசாயன முறையில் மாங்காய்களை பழுக்க வைப்பதால் ஆபத்து

நிலக்கோட்டை: மாவட்டம் முழுவதும் மா விளைச்சல் துவங்கி உள்ளதால் ரசாயன முறையில் காய்களை பழுக்க வைப்பதில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். உணவு பாதுகாப்புத் துறையினர் ரசாயன முறையில் காய்களை பழுக்க வைப்பதை கண்காணித்து தடுக்க வேண்டும்.
மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் மாவட்டத்தில் மா விளைச்சல் துவங்கும். வத்தலக்குண்டு, கொடைரோடு, அய்யம்பாளையம், ஆத்தூர், நத்தம், பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மா விளைகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பெங்களூரு, கேரளாவிற்கும் அனுப்பப்படுகிறது. மாமரங்களில் பூ விடும் சமயத்தில் மழை அதிகமாக பெய்ததால் மா விளைச்சல் குறைந்தது. கிடைக்கின்ற காய்களை விரைவாக பழுக்க வைத்து அதிக லாபம் பார்ப்பதற்காக வியாபாரிகள் ரசாயன முறைகளை கையாண்டு வருகின்றனர். மாங்காய்களை குளோரைடு கற்களை கொண்டு பழுக்க வைப்பதன் மூலம், மேல் பகுதியில் கரும்புள்ளிகள் தென்படும். இதனை சாப்பிடும் பொழுது நாக்கில் அரிப்பு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.
வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் இவ்வகை மாம்பழங்கள் அதிக நோய் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தற்பொழுது புதிய நடைமுறையாக பழங்கள் மீது தெளிப்பான்கள் மூலம் வேதியியல் படிமங்கள் தெளிக்கப்பட்டு பழுக்க வைக்கப்படுகிறது. இவ்வகை பழங்கள் வாடிக்கையாளர்கள் கண்களுக்கு பளபளப்பாக தெரிவதால் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வேதியியல் படிமங்கள் தோலில் சேர்ந்து விடுவதால் வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. சுகாதாரத் துறையினரும் இவ்விரு வகையான பழங்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும், பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு