நாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வடமதுரை: வடமதுரை வி.மேட்டுப்பட்டியில் டக்கா, பென்லி வாடன்கள் குலதெய்வம் ஸ்ரீநாச்சாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் சுதர்சன ஹோமம், தீர்த்த அழைப்புயுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.

வடமதுரை மங்கம்மாள்கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில் பட்டாச்சாரியார் நாராயணன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். தி.மு.க., நகர செயலாளர் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திகேயன், சுப்பிரமணி பங்கேற்றனர்.

Advertisement