முத்தாலம்மன் கோயில் திருவிழா

நத்தம்,: நத்தம் அருகே பண்ணுவார்பட்டி, பள்ளபட்டியில் மந்தை முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு பண்ணுவார்பட்டியில் செய்யப்பட்ட முத்தாலம்மன் தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் ஊர்வலம் நடந்தது.
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்கினிசட்டி,மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி நேர்த்திக்
கடன்களை செலுத்தினர். நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஊராளிபட்டி, சீரங்கம்பட்டியில் உள்ள மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவும் இதேபோல் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
Advertisement
Advertisement