மாநகராட்சி பள்ளிகளில் 2.97% அதிகரிப்பு
கோவை : கோவை மாநகராட்சியின் கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2024-25 கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 1,640 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 540 பேர் மாணவர்கள்; 1,100 பேர் மாணவிகள். தேர்வில் 493 மாணவர்களும், 1,064 மாணவிகளும் உள்ளிட்ட மொத்தம் 1,557 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.30 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.73 ஆக, மொத்தம் 94.94 சதவீதம். இது கடந்த ஆண்டின் 91.97 சதவீத தேர்ச்சி விகிதத்தை விட 2.97 அதிகம்.
இதில், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் (மேற்கு) மற்றும் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. ஒக்கிலியர்காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 586 மதிப்பெண் பெற்று முதல் இடமும், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 572 மதிப்பெண்ணுடன் இடண்டாவது இடமும், 569 மதிப்பெண்ணுடன் மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒப்பணக்காரவீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
மாநகராட்சி கல்வி அலுவலர் தாம்சன் கூறியதாவது:
மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், காலை மற்றும் மாலை நேர பயிற்சிகளை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக நடத்தினோம். மேலும், கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆசிரியர்களுடன் திட்டமிட்டு செயல்பட்டோம்.
அதிக நிதி ஒதுக்கப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் தொடக்கத்திலிருந்தே எங்கள் கவனம் முழுமையாக இருந்தது. அதன் விளைவாக, 10 பள்ளிகள் 90 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு