நான்காவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி: 4 விக்கெட் வீழ்த்திய 'காஸ்மோ' வீரர்
கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் மூன்றாவது டிவிஷன் போட்டி பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., உட்பட பல்வேறு மைதானங்களில் நடக்கிறது. என்.ஐ. ஏ., கல்வி நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும், ரெட் டயமண்ட்ஸ் அணியும் மோதின.
பேட்டிங் செய்த என்.ஐ.ஏ., அணியினர், 35.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 161 ரன்கள் எடுத்தனர். வீரர் அருண் பிரகாஷ், 30 ரன்கள் எடுத்தார். ரெட் டயமண்ட்ஸ் அணியினர், 46.3 ஓவரில், 161 ரன்கள் எடுக்க போட்டி சமனில் முடிந்தது.
வீரர்கள் ரோசன் ஜெபகுமார், 44 ரன்களும், சிவகுமார், 33 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர் அசோக் குமார் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார்.
நான்காவது டிவிஷன் போட்டியில் காஸ்மோ விலேஜ் ஆர்.பி.இ.எஸ்.ஏ., அணியும், சாம் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின.
பேட்டிங் செய்த காஸ்மோ அணியினர், 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 51 ரன்கள் எடுத்தது. எதிரணி வீரர் வெங்கடேஷ் நான்கு விக்கெட்கள் வீழ்த்தினார். சாம் கிரிக்கெட் அகாடமியினர், 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு, 52 ரன்கள் எடுத்தனர். வீரர் நிசாந்த், 31 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.
மேலும்
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு