ரோட்டில் விழுந்த சிமென்ட் மூடைகள்

வடமதுரை: கேரளா மாநிலம் திருச்சூர் பரியூரை சேர்ந்த மினி வேன் டிரைவர் ஆல்வின் 27. நேற்றுமுன்தினம் பட்டுக்கோட்டையிலிருந்து சிமென்ட் மூடைகளை ஏற்றி கொண்டு கேரளா புறப்பட்டார்.

நான்கு வழிச்சாலையில் வடமதுரை மோர்பட்டி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டின் குறுக்கே கவிழ்ந்தது. ரோட்டில் சிதறி விழுந்ததால் அவ்வழியே அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Advertisement