மின்சாரம் தாக்கி நர்ஸ் பலி

சூலுார்; கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்தவர் வாணி ஸ்ரீ, 47. நர்ஸ். கடந்த சில மாதங்களாக பட்டணம் புதூரில் உள்ள ஒரு வீட்டில், ஹோம் நர்ஸாக வேலை செய்து வந்தார். மகளை பார்க்க அவரது தாய் லட்சுமி, தனது பேத்தியுடன் நேற்று முன்தினம் பட்டணம் புதுார் வந்தார்.

வீட்டின் மாடிப்படிக்கு அருகில் உள்ள அறையில் வாணி ஸ்ரீ இறந்து கிடந்தார். புகாரையடுத்து, சூலுார் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று வாணி ஸ்ரீ, குளிப்பதற்காக, குளியலறைக்கு சென்றபோது, மோட்டார் ஒயர் மீது கை பட்டதால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரிந்தது.

Advertisement