தேயிலை ஏலத்தில் வரத்து அதிகரிப்பு; ரூ.38.32 கோடிக்கு விற்பனை
குன்னுார் : தென் மாநிலங்களில் உள்ள ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 38.32 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 18வது ஏலத்தில், '16.48 லட்சம் கிலோ இலை ரகம்; 5.02 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 21.50 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
'12.35 லட்சம் கிலோ இலை ரகம்; 3.94 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என மொத்தம், 16.29 லட்சம் கிலோ விற்பனையானது.
கடந்த ஏலத்தை விட, 7.90 லட்சம் கிலோ வரத்து மற்றும் 4.90 லட்சம் கிலோ விற்பனை அதிகரித்தது. வரத்து அதிகரித்ததால், சராசரி விலையை வர்த்தகர்கள் குறைத்து விற்றனர். 75.76 சதவீதம் விற்ற நிலையில், 24.24 சதவீதம் தேக்கமானது. சராசரி விலை கிலோவிற்கு, 116.62 ரூபாய் என இருந்தது; சராசரி விலையில் கிலோவிற்கு, 5 ரூபாய் வரை சரிந்தது. மொத்த வருமானம், 19 கோடி ரூபாய் கிடைத்தது. ஒரே வாரத்தில், 5.22 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்தது.
'டீசர்வ்' ஏலம்
நீலகிரி கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள்கள் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 18வது ஏலத்திற்கு, 1.36 லட்சம் கிலோ வந்ததில், 1.28 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 106.89 என இருந்தது. கிலோவிற்கு, 2 ரூபாய் சரிந்தது. 1.37 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
கோவை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 4.73 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்ததில், 2.78 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை,129 ரூபாய் என இருந்தது. 4.61 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. 44.31 சதவீதம் தேக்கமடைந்தது. ஒரு கோடி ரூபாய் மொத்த வருமானம் சரிந்தது.
கொச்சி ஏல மையத்தில், 9.75 லட்சம் கிலோ ஏலத்துக்கு வந்ததில், 8.03 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை, 166.03 ரூபாய் என இருந்தது. 13.34 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 2.45 கோடி ரூபாய் குறைந்தது.
தென் மாநிலங்களில், 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 38.32 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, இந்த ஏலத்தில், 14.87 கோடி ரூபாய் வருவாய் அதிகமாக இருந்தது.
மேலும்
-
அரபிக்கடல் பிராந்தியம் முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது கடற்படை!
-
எல்லை மாநிலமான ராஜஸ்தானில் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவு
-
பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்திய கடற்படை; அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்கள்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு