நாளை ரேஷன் குறைதீர் முகாம்

தேனி: மாவட்டத்தில் நாளை(மே 10) ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைதீர் முகாம் 5 தாலுகாவிலும் நடக்கிறது. இந்த முகாமில் பொதுமக்கள், நுகர்வோர் குழுக்கள் பங்கேற்று ரேஷன் வினியோகம் தொடர்பான குறைகள் புகார்களை தெரிவிக்கலாம். மனுக்களை பெற்றுக்கொள்ள துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். பெரியகுளம் தெய்வேந்திரபுரம் ரேஷன்கடை, தேனி வெங்கடாசலபுரம் ரேஷன்கடை, ஆண்டிபட்டி ஜி.உசிலம்பட்டி ரேஷன்கடை, உத்தமபாளையம் கீழபூலானந்தபுரம், போடி வாழையாத்துப்பட்டி ரேஷன் கடை ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

Advertisement