ஆசிய செஸ்: இனியன் அபாரம்

அல் ஐன்: ஆசிய 'கான்டினென்டல்' செஸ் 2வது சுற்றில் இந்தியாவின் இனியன், முரளி கார்த்திகேயன், பிரனேஷ் வெற்றி பெற்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய 'கான்டினென்டல்' செஸ் தொடர் நடக்கிறது. இதன் 2வது சுற்றில் இந்தியாவின் இனியன், சீனாவின் ஷிசூ வாங் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய இனியன் 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன் (கருப்பு), சீனாவின் லுா யிபிங்கை (வெள்ளை) வென்றார். இந்தியாவின் அபிஜீத் குப்தா (வெள்ளை), சகவீரர் செந்தில் மாறனை (கருப்பு) தோற்கடித்தார். இந்தியாவின் பிரனேஷ் (கருப்பு), சீனாவின் ஜியாங்ருய் காங்கை (வெள்ளை) வீழ்த்தினார். இந்தியாவின் நிஹால் சரின் (வெள்ளை), ரஷ்யாவின் நிகிதா மாட்டினியனை (கருப்பு) வென்றார்.
மற்ற 2வது சுற்று போட்டிகளை இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, சேதுராமன், அஸ்வத், பிரணவ் ஆனந்த் உள்ளிட்டோர் 'டிரா' செய்தனர்.
பெண்கள் பிரிவில் நடந்த 2வது சுற்று போட்டியில் இந்தியாவின் வந்திகா அகர்வால், பிரியங்கா, ரக் ஷிதா தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தனர்.
மேலும்
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்