'கிராண்ட் ப்ரி' செஸ்: வைஷாலி 'டிரா'

கிராஸ்லோப்மிங்: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரின் 3வது சுற்றை இந்திய வீராங்கனை வைஷாலி 'டிரா' செய்தார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் 'டாப்--2' இடம் பிடிப்பவர்கள், கேண்டிடேட்ஸ் தொடரில் (உலக கோப்பை தகுதி போட்டி) பங்கேற்கலாம். இதுவரை முடிந்த 5 கட்ட போட்டிகளின் முடிவில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா (308.34 புள்ளி), இந்தியாவின் ஹம்பி (279.17) முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.
இதன் கடைசி, 6வது தொடர் ஆஸ்திரியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 3வது சுற்றில் வைஷாலி (வெள்ளை), ஜார்ஜியாவின் நானா டிசாக்னிட்ஸே (கருப்பு) மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 40வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மூன்று சுற்றுகளின் முடிவில் தமிழகத்தின் வைஷாலி, உக்ரைனின் அனா முசிசுக்குடன் (தலா 2.5 புள்ளி) முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும்
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!