மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
பஜன் நிகழ்ச்சி
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில், மாதாந்திர பஜன் இன்று நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ மாருதி கான சபாவில், மாலை, 5:15 மணி முதல் பஜன் நடைபெறும். நிகழ்ச்சியை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படும்.
மகோற்சவம்
அட்டப்பாடி, புதுார் மாரியம்மன் கோவிலில், 52வது மகோற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று மாலை பூவோடு எடுத்து வரும் நிகழ்வு நடந்ததை தொடர்ந்து, இன்று இரவு, 7:00 மணி, கரகம், பூவோடு நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
குண்டம் திருவிழா
ராம்நகர், கோகலே வீதி, மங்கள விநாயகர் முத்துமாரியம்மன் கோவிலில், 57வது சித்திரை மாத திருக்கல்யாண உற்சவம் மற்றும் குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.
திருக்கல்யாண நிகழ்வு
மயிலம்பட்டி, சக்தி விநாயகர், கருப்பராயர், கன்னிமார் கோவிலில், அரசு வேம்பு திருக்கல்யாண வைபவ விழா நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பாலவிநாயகர் கோவிலிலிருந்து சீர்வரிசை தட்டு கொண்டு வந்து, இரவு, 7:30 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
உற்சவ திருவிழா
செல்வபுரம் ரோடு, சக்திமாரியம்மன் கோவிலில், 41ம் ஆண்டு உற்சவ திருவிழா நடக்கிறது. இன்று மாலை, 6:00 மணிக்கு, அம்மன் சக்தி கரகத்துடன் கோவிலிலிருந்து புறப்பட்டு ஊர்பவனி வந்து நொய்யலாற்றை அடைதல் நிகழ்ச்சி நடக்கிறது.
பெருந்திருவிழா
ஒத்தக்கால்மண்டபம், புற்றிடங்கொண்டீசர் கோவிலில், 16ம் ஆண்டு பெருந்திருவிழா நடந்து வருகிறது. இன்று மாலை, 6:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், குதிரைவாகனத்தில் பிறை சூடிப் பெருமான் பிராட்டியுடன் , அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு, திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு, வேடுபறி நடக்கிறது.
பாராட்டு விழா
கோவை மாருதி கான சபா சார்பில், கலைத்துறையில் 50 ஆண்டுகளாக பயணித்து வரும் மிருதங்க கலைஞர் நெல்லை கண்ணனுக்கு, பாராட்டு விழா நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ மாருதி கான சபா அரங்கத்தில், காலை, 9:45 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம், குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.
மேலும்
-
திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்தில் வீட்டில் இருந்த தம்பதி கொலை
-
சத்தீஸ்கரில் யானை தாக்கி பெண்கள் இருவர் மரணம்
-
இந்திய தாக்குதலில் சேதமடைந்த பயங்கரவாத முகாம்கள்: வீடியோ வெளியீடு
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!