அனுமதியின்றி நில அளவீடு தாசில்தார் மீது குற்றச்சாட்டு

திருத்தணி:ஆர்.கே.பேட்டை தாலுகா விளக்கணாம்பூடி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத், 35. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், ராஜாநகரம் நரசம்பேட்டை கிராமத்தில் உள்ளது.

இவரது நிலத்திற்கு அருகில் உள்ளவருக்கும், இவருக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆர்.கே.பேட்டை தாசில்தார் ராஜேஷ்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் வினோத்குமார், முறையாக சம்மன் அளிக்காமல் மனுதாரர் மற்றும் எதிர்தரப்பினர் இல்லாமலேயே, வருவாய்த் துறையினர் நில அளவீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த வினோத்குமார், அரசு விதிகளை பின்பற்றாமல் நில அளவீடு பணிகளை செய்த ஆர்.கே.பேட்டை தாசில்தார் ராஜேஷ்குமார், சர்வேயர் சபரிநாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருத்தணி ஆர்.டி.ஓ., தீபாவிடம் புகார் அளித்தார்.

Advertisement