திருநங்கையர் நிகழ்ச்சியில் நடிகர் விஷாலுக்கு மயக்கம்,,

விழுப்புரம்: விழுப்புரத்தில், 'மிஸ் திருநங்கை - 2025' நிகழ்ச்சி நேற்று நடந்-தது. இதில் பேசிய பின், நடிகர் விஷால், திருநங்கையரோடு குழு புகைப்படம் எடுத்தார். அப்போது மேடையில் மயங்கி விழுந்தார்.


தொடர்ந்து, நிகழ்ச்சி நடந்த இடத்தில் மருத்துவ முகாமில் இருந்த டாக்டர்கள், விஷாலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விஷால், உணவு அருந்தாமல் வந்ததால் மயங்கியதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விஷால் மயங்கியதையடுத்து, மக்கள் கூட்டம் சூழ்ந்தது. இரவு, 9:50 மணிக்கு சகஜ நிலைக்கு திரும்பிய விஷாலை, பவுன்சர்கள் அழைத்துச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினர்.

Advertisement