முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், அக்னி நட்சத்திர விழாவை முன்னிட்டு நேற்று நடந்த ஏகாதச ருத்ர ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சென்னிமலையில் மலை மீதுள்ள முருகன் கோவிலில், சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர விழா நடக்கிறது. நடப்பாண்டு, 42வது ஆண்டாக நடந்த மூன்று நாள் விழாவில், முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமானுக்கு நேற்று காலை, சப்த நதி தீர்த்த அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து வேதி-கார்ச்சனை, 108 கலசாபிஷேகம் மற்றும் ஏகாதச ருத்ர ேஹாமம் மற்றும் பூர்ணாகுதியை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதையடுத்து உற்சவமூர்த்தி புறப்பாடு நடந்தது. ஆயிரக்கணக்-கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement