வறட்சி நிலமாக மாறி வரும் குளம்

மேலுார்; கொட்டக்குடியில் குளம் முழுவதும் மணல் நிரம்பியதால், பாசனத்திற்கு தண்ணீர் சேமிக்க முடியாமல் சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
மேலுார் - கொட்டக்குடிக்கு 6 ஏ பெரியாறு பிரதான கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரால்பெரிய கண்மாய் நிரம்பும். இக்கண்மாயின் 2வதுமடை வழியாக செல்லும்தண்ணீரால் ஒன்றியத்துக்குச் சொந்தமான 7.5 ஏக்கர் பரப்பிலான பெருமாள் குளம் நிரம்பி அதன் மூலம் ஏராளமான ஏக்கர் பாசனம் பெறும்.
கண்மாய் நிரம்பி வெளியேறும் தண்ணீர் கம்பளத்தான் கண்மாய்க்கு செல்லும். இக்குளத்தை துார்வாராததால் மணலால்நிரம்பி, சாகுபடி நிலம் போல் சமதளமாகி வருகிறது.
விவசாயி பாண்டி கூறியதாவது:
குளத்தை ஆழப்படுத்தாததால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேறிவிடுகிறது. அருகில் உள்ள வயல்களுக்குள் புகுந்து பயிர்களை அடித்துச் செல்வதோடு பயிர்களும் அழுகும். இக்குளத்தை நம்பியுள்ள நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. குளத்தை துார்வாரும்படி வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.
ஒன்றிய அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகத்திற்கு குளம் தண்ணீரால் நிரம்பி இருப்பதாக தவறான தகவல் கொடுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உண்மையை கண்டறிந்து பருவமழை காலத்திற்கு முன் குளத்தை துார்வாரி கரையை பலப்படுத்த வேண்டும். மடை, கால்வாயை மராமத்து செய்ய வேண்டும் என்றார்.
பி.டி.ஒ., சுந்தரசாமி கூறுகையில், நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி