போலீஸ் செய்திகள்

கொலையானவரின் உறவினர்கள் மறியல்



திருமங்கலம்: மறவன்குளம் வேன் டிரைவர் பாண்டி 32. அதே கிராமத்தில் மணிகண்டன் என்பவரிடம் ரூ. 3 லட்சம்கடன் பெற்றார். ரூ.ஒரு லட்சத்தை திருப்பி கொடுத்த நிலையில், ரூ.2 லட்சம் தராத பிரச்னையில் கொலை செய்யப்பட்டார். மணிகண்டன், அவரது தாய் மாதா கைது செய்யப்பட்டனர். உடலை வாங்க மறுத்து மணிகண்டனின் உறவினர்களுக்கும் கொலையில் தொடர்பு உள்ளது. அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறிய பாண்டியின் உறவினர்கள் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் செய்தனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.

விபத்தில் பெண் பலி



கொட்டாம்பட்டி: மதுரை கோவில்பாப்பாக்குடி ராம்குமார் 30. சென்னை ஐ.டி., ஊழியர். நேற்று காலை மனைவி மகாலட்சுமி 28, குழந்தைகள் அஸ்விக் 4 மாத குழந்தை, ஷஸ்விகா 5, மாமியார் மகேஸ்வரி 55, உடன் காரில் மதுரை வந்தார். மேலுார் வஞ்சி நகரம் அருகே டைல்ஸ் கற்கள் ஏற்றிவந்த லாரி பின்னால் கார் மோதியது. இதில் மகேஸ்வரி இறந்தார். ராம்குமார் மதுரை தனியார் மருத்துவமனையிலும், மனைவி மற்றும் குழந்தைகள் மேலுார் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் விசாரிக்கிறார்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி



பேரையூர்: சாப்டூர் 4 வார்டு முனியாண்டி 45. இவர் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று வண்டாரியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்ற இவர் அங்கு நட்டியிருந்த இரும்பு கம்பி மீது கை வைத்தார். அந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இறந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement