மயானத்தில் பழுதான 'பைப் லைன்' சுகாதார வளாகம் மூடல்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி ஒன்றியம் நாச்சிகுளம் ஊராட்சி மயானத்தில் 'பைப் லைன்' பழுதால் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இம்மயானத்தில் 2021ல் ஒன்றிய பொது நிதி ரூ.1.50 லட்சத்தில் 'போர்வெல்லுடன்' குளியல் தொட்டி கட்டப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே பயன்பட்ட நிலையில் 'போர்வெல்' முதல் குளியல் தொட்டி இடையேயான 'பைப் லைன்' சேதமானது. இன்று வரை சரி செய்யப்படாததால் குளியல் தொட்டியும், சமீபத்தில் ரூ.3.50 லட்சத்தில் கட்டிய கூடுதல் சுகாதார வளாகமும் பயன்பாட்டிற்கு வராமல் அரசின் நிதி வீணாகிறது. இறுதி சடங்குகள் செய்ய கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் (அ.தி.மு.க.,) தங்கப்பாண்டி: 'பைப் லைன்' பழுதான நாள் முதல் பி.டி.ஓ.,க்கள், கலெக்டர் வரை மனு அளித்தேன். பி.டி.ஓ.க்களிடம் வலியுறுத்தியும் பயனில்லை. மக்கள் நலன் கருதி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
-
அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'