துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'

5

சென்னை: தி.மு.க., பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகன், 86, நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும் சளித்தொற்று காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.

இதயவியல், குடல் இரைப்பை நலன் உட்பட, பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள், துரைமுருகனின் உடல் நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

உடல்நிலை சரியானதைத் தொடர்ந்து, நேற்று மருத்துவமனையில் இருந்து, வீடு திரும்பினார்.

Advertisement