சூசையப்பர் ஆலய தேர் பவனி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே பிச்சங்குறிச்சி சூசையப்பர் ஆலய விழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்கு பாதிரியார் ஜெபமாலை சுரேஷ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் நடந்தன. முக்கிய விழாவான தேர் பவனி விழா நேற்று இரவு நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சூசையப்பர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து திருவிழா திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement