காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?

செ ன்னை போன்ற நகரங்கள், அதை ஒட்டிய பகுதிகளில் வீடு, மனை வாங்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம், ஆசை இருக்கும். ஆனால், பொருளாதார சூழல் மற்றும் விலைவாசி காரணமாக குறைந்த வருவாய் பிரிவினரால் சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு, மனை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இத்தகைய சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும், பக்கத்து மாவட்டங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிவிக்கும் மனைப்பிரிவு திட்டங்களையே நாடுகின்றனர். இது போன்ற மனைப்பிரிவு திட்டங்களில் நிலம் வாங்குவது என்று இறங்கினால் அதில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மனைப்பிரிவு திட்டங்களில் நிலம் வாங்கும் போது அதற்கான அங்கீகாரம், நில உரிமை போன்ற விஷயங்களில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
பொதுவாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் பெயரில் நிலத்தை கிரையமாக வாங்காமல், பொது அதிகார ஆவணம் பெற்று அதை மேம்படுத்தி விற்பனை செய்கின்றன.
இதில் நீங்கள் மனை வாங்க விரும்பும் திட்டத்துக்கான நிலம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் எப்படி பெறப்பட்டது என்பதை அறிவது அவசியம். பொது அதிகார ஆவணம் வாயிலாக பெறப்பட்டது என்றால், அதன் உரிமையாளருக்கு அந்த நிலம் எப்போது, எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்களை துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும்.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் திட்டங்களில் மனை வாங்கும் போது, அதில் ஆவணத்தில் குறிப்பிட்டபடி, நீளம், அகலம் சரியாக இருக்கிறதா என்று களத்தில் இறங்கி அளந்து பார்க்க வேண்டும்.
சில இடங்களில், 2,000 சதுர அடி இருப்பதாக கூறி அதற்கான விலை தொகையை நிறுவனங்கள் வசூலிக்கும்.
ஆனால், அங்கு களத்தில் இறங்கி நீளம், அகலம் ஆகியவற்றை துல்லியமாக அளக்கும் போது, 1,800 சதுர அடி நிலம் தான் இருக்கும். விடுபட்ட, 200 சதுர அடிக்கு பணம் செலுத்தியும் நிலம் கிடைக்காத சூழல் இருக்கும் என்பதால் வாங்கும் நிலையில் அளந்து பார்ப்பது அவசியம்.
பத்திரத்தில் இருக்கும் அளவு, பட்டாவில் இருக்கும் அளவுக்கு அப்படியே விலை பேசி, பணத்தை கொடுத்துவிடாமல், எதார்த்த நிலையில் எவ்வளவு சதுர அடி கொடுக்கப்படுகிறது என்று பார்த்து அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும். இந்த விஷயத்தில் எதிர்காலத்தில் உங்கள் மனையில் இருந்து, 10 முதல், 20 சதவீத நிலங்கள் சாலை விரிவாக்கம் போன்ற காரணங்கள் அடிப்படையில் எடுக்கப்படும்.
எனவே, மனை வாங்கும் போது அதன் அளவு விஷயத்தில் துளியும் சமரசம் செய்து கொள்ளாமல் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். அப்போது தான் நீங்கள் செலுத்தும் பணத்துக்கான முழுமையான பலன் கிடைக்கும் என்கின்றனர் நகரமைப்பு துறை வல்லுனர்கள்.
மேலும்
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
-
அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'