கஞ்சா:வாலிபர் கைது

கன்னிவாடி: தருமத்துப்பட்டி போடம்பட்டியை சேர்ந்த கரன் 31, தருமத்துப்பட்டி அருகே சாத்தாரப்பன் கோயில் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார்.

அடிக்கடி தேனியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சா, டூ வீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement