செயல் விளக்க முகாம்

ரெட்டியார்சத்திரம்: செம்பட்டி ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லூரி 4ம் ஆண்டு மாணவியர், கிராம தங்கல் திட்டத்தில் ரெட்டியார்சத்திரம் பகுதியில் கிராம வேளாண் பணி அனுபவ திட்டத்தின்படி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர்.

கெம்மனம்பட்டியில் இனக்கவர்ச்சி பொறி முறையில் பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடத்தினர். மாணவியர் சி.அபிநயா, மு.அபிநயா, அப்ரின்பானு, ஆன்டோஜெயபிரியா, அனுபிரபா, தனஸ்ரீ ஆகியோர், ரசாயன பூச்சி கொல்லிகளால் ஏற்படும் தீமைகள், கூடுதல் செலவினம், இயற்கை முறை கவர்ச்சி பொறி அமைப்புகளால் பூச்சி பரவல் தடுப்பு அழிக்கும் வழிமுறைகள் குறித்து பேசினர். இவற்றின் செயல்பாட்டு முறை பற்றி செயல் விளக்கம் அளித்ததோடு, சாகுபடி நுட்பங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.

Advertisement