21 ஆண்டுகளாக விவேகானந்தா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவர்கள் எஸ்.ருத்ரேஸ் கண்ணா பிளஸ் 2 தேர்வில் 600 க்கு 581 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், பி.ஹரீஷ் 568 மதிப்பெண் பெற்று 2 ம் இடத்தையும், பி.நிவாஸ் 544 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர். நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பாட வாரியாக முதல் மதிப்பெண் தமிழ் 99, ஆங்கிலம் 96, கணிதம் 95, இயற்பியல் 98, வேதியியல் 98, உயிரியல் 90, கணினி அறிவியல் 100 (4 மாணவர்கள்), கணினி பயன்பாடு 97, வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் 98, பொருளியல் 92 என பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் ரங்கசாமி, தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement