டிஜிட்டல் கிராப் சர்வே பணி தீவிரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்த டிஜிட்டல் கிராப் சர்வே எடுக்கும் பணி 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

கோடை பருவத்தில் தென்னை, பழப்பயிர்கள், காய்கறி பயிர்கள், பயறு வகை, எள், உளுந்து, பாசிப்பயறு, சோளம், மக்காச்சோளம் பரப்பு குறித்த சர்வே எடுக்கும் பணிகள் ஏப். 28ல் துவங்கியது. இதுவரை 85 சதவீதப்பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் மே 15க்குள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் கூறியதாவது: இந்த சர்வே பணிகள் மூலமாக இனி வரும் காலங்களில் விவசாயிகளின் தரவுகளை இணையத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இது போன்று டிஜிட்டல் முறை பயிர் கணக்கீடு செய்வதால் கடந்தாண்டை விட நடப்பாண்டு கூடுதல் சாகுபடி நடந்துள்ளதா என்பதை அறிய முடியும். பேரிடர் மேலாண்மையின் போது பயிர் சேதத்தை துல்லியமாக கணக்கிட்டு அதற்கேற்ப இழப்பீடு வழங்க முடியும் என்றார்.

Advertisement