கோயில் திருவிழா

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி காந்திபுரம் முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் எல்லை காவல்காரன் பூஜையுடன் அம்மன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பக்தர்கள் மாவிளக்கு பூஜை நடத்தினர். நேர்த்திக்கடன் செலுத்தினர். இறுதி நாளில் பொங்கல் வைக்கப்பட்டு, முளைப்பாரி ஊர்வலம், வான வேடிக்கையுடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைந்தார்.

நத்தம்: குட்டூர் மந்தை முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முதல்நாள் இரவு தீவட்டி பரிவாரங்கள், வானவேடிக்கைகளுடன் முத்தாலம்மன் ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, மாவிளக்கு, கிடாய்கள் வெட்டி நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று மாலை வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.

Advertisement