திண்டுக்கல் துணை மேயர் இல்ல திருமண விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர், மாநகர் தி.மு.க., செயலாளர் ராஜப்பா - விமலா தம்பதியின் மகன் பொறியாளர் ஜோவின் கார்முகிலன். இவருக்கும் பழநியைச் சேர்ந்த ராஜா - விஜி தம்பதியின் மகள் அஸ்விந்தாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்களின் திருமணம் திண்டுக்கல் புனித வளனார் சர்ச்சில் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடந்தது. முதன்மை குரு சகாயராஜ், பாதிரியார்கள் சவுந்தர்ராஜன், மரிய இன்னாசி, செல்வராஜ், எர்னெஸ்ட் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலையில் திருப்பலி, திருமணம் நடந்தது.அதன் பின் திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பி.எஸ்.என்.ஏ., மண்டபத்தில் திருமண வரவேற்பில் அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்து பேசினார்.

அமைச்சர் சக்கரபாணி மணமக்களை வாழ்த்தினார். எம்.எல்.ஏ., செந்தில்குமார், முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து செய்தியை வாசித்து, வாழ்த்து மடலை மணமக்களிடம் வழங்கினார்.

இதில் எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., காந்திராஜன், மேயர் இளமதி, மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராகவன், மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, மாநகர அவைத் தலைவர் முகமது இப்ராகிம், துணை செயலாளர்கள் முகமது சித்திக், அழகர்சாமி, பொருளாளர் சரவணன், தி.மு.க., நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் வாழ்த்தினர். திருமண விழாவுக்கு வந்த அனைவரையும் துணை மேயர் ராஜப்பா, மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கால்டினஸ் இமானுவேல் நன்றி கூறினர்.

Advertisement