மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போடியில் எம்.பி., கனிமொழி பேச்சு

போடி: 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைத்தால் தமிழகம் பாதிக்கப்படும்,' என தி.மு.க., எம்.பி., கனிமொழி
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசினார்.
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் 4 ஆண்டு கால தி.மு.க.,அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் போடியில் நடந்தது.
தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தலைமை வகித்தார். போடி நகர செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் எம்.எல்.ஏ., முக்கையா, எம்.எல்.ஏ. சரவணகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐய்யப்பன், நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எம்.பி., கனிமொழி பேசியதாவது: பா.ஜ., இன்று மட்டும் அல்ல. நம்மிடம் காலம், காலமாக பகை கொண்டு உள்ளது. ஏனென்றால் இது வர்க்க, இன, மொழி, ஆதிக்க போராட்டம். பா.ஜ.,தங்களது கருத்துக்களை தமிழக மக்கள் மீது திணித்து வருகின்றன.
மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற பல நல்ல திட்டங்களை தமிழக அரசு செயல்படுகிறது. சுகாதாரத்திற்கு வழங்கிய முக்கியத்துவத்தால் வளரும் நாடுகளுக்கு இணையாக தமிழகத்தில் மக்கள் தொகை கட்டுக்குள் உள்ளது. சில மாநிலங்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாததால் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, இந் நிலையில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி சீரமைக்கும் திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும். சிறப்பாக செயல்படுவதற்கு தண்டனையாக தொகுதி வரையறை கொண்டு வருவதை எப்படி ஏற்க முடியும்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காலை உணவு திட்டத்தால் 17 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வருகின்றனர். 48 மணி நேர விபத்து சிகிச்சை திட்டத்தால் 3 லட்சம் பேர் பயன் பெற்று உள்ளனர். கோரிக்கை வைப்பதற்கு முன்பு அதனை நிறை வேற்றும் ஆட்சியாக தமிழகம் உள்ளது என்றார்.
மேலும்
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!