பால் குளிரூட்டும் இயந்திரங்கள் திறந்த வெளியில் கிடந்து வீணாகிறது

பெரியகுளம்: பெரியகுளம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் இயந்திரம், ஜெனரேட்டர் ஆவின் அதிகாரிகள் அலட்சியத்தால் பல மாதங்களாக திறந்த வெளியில் கிடந்து வெயில்,மழையால் சேதமடைந்து வருகிறது.
பெரியகுளம் தாலுகாவில் விவசாயத்துடன் பால் மாடுகள் வளர்ப்பு அதிகம் உள்ளது.
பெரியகுளம், சிந்துவம்பட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், எண்டப்புளி உட்பட பல கிராமங்களிலிருந்து தினமும் 2500 முதல் 3000 லிட்டர் பால் உற்பத்தி செய்து பெரியகுளம்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு விவசாயிகள் வழங்குகின்றனர். இதில் உள்ளூரில் 800 லி., பால் விற்பனை செய்கின்றனர்.
மீதமுள்ள 1300 லிட்டர் பால் சங்கத்திலிருந்து, தேனி ஆவினுக்கு இரு லாரியில் தினமும் அனுப்பப்படுகிறது.
கிடப்பில் குளிரூட்டும் மையம்
பெரியகுளம் தாலுகாவில் நீண்ட தொலைவில் உள்ள சிந்துவம்பட்டி , குள்ளப்புரம் உள்ளிட்ட கிராமப் பகுதியிலிருந்து பால் கறந்து கேன்களில் நிரப்பி 25 கி.மீ., தூரம் உள்ள தேனி ஆவின் குளிரூட்டும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பால் கறவை செய்து நீண்டநேரம் குளிரூட்டாமல் இருப்பதால் அடிக்கடி பால் கெட்டுபோகிறது. பால் வீணாவதை தடுக்க பெரியகுளம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வளாகத்தில் 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் மையம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அலட்சிய அதிகாரிகள்
இதற்காக ஆவின் ரூ.40 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் நவீன இயந்திரத்தை கடந்த ஆண்டு நவம்பரில் வாங்கி சங்க வளாத்தில் இறக்கியது. இதற்கான அறை கட்டப்பட்டுள்ளது.
குளிரூட்டும் அறையில் நவீன இயந்திரங்களை பொருத்தி ஜனவரில் திறக்க ஏற்பாடு நடந்தது.
ஆவின் அதிகாரியின் அலட்சியத்தில் இத் திட்டம் முடங்கி உள்ளது.
ஆறு மாதங்களாக பால் குளிரூட்டும் இயந்திரம், ஜெனரேட்டர் திறந்த வெளியில் கிடந்து வெயில், மழையில் நனைத்து துருப்பிடிக்கும் அபாயத்தில் உள்ளது.
கட்டடம் கட்டி பூட்டி வைத்துள்ளனர். இத் திட்டம் செயல்படுத்தினால் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், பால் கெட்டு போகாமல் பாதுக்க இயலும்.
ஆனால் ஆவின் அதிகாரிகள் இது பற்றி கவலை கொள்வது இல்லை. எது எப்படி கிடந்தால் நமக்கென்ன என்ற மனநிலையில் அரசின் நிதியை வீணடித்து வருகின்றனர் என விவசாயிகள் குமுறுகின்றனர்.
இது பற்றி கூட்டுறவு பால் சங்க செயலாளர் வெள்ளைப்பாண்டி கூறுகையில, 'குளிரூட்டும் மையம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி ஆவின் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறோம்,' என்றார்.
மேலும்
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி