நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

தேனி: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.6750 வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு சலுகை, ஈமக்கிரியை செலவுத்தொகை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசை கண்டித்து, பட்டை நாமமிட்டு மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் கிருபா, தேன்மொழி முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன், அரசு ஊழியர் சங்கமாவட்டத் தலைவர் உடையாளி வாழ்த்திப்பேசினர். மாநில நிதிக்காப்பாளர் நுார்ஜஹான் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் நன்றி கூறினார். அரசு ஊழியர்கள் சங்க அலுவலத்தில் நடந்த கூட்டத்திற்கு பின் நாமம் இட்டு, மடி ஏந்தி அனைவரும் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகளிடம் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும்
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
-
அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'