தரம் குறைவான தங்கத்தை அடகு வைத்தவர் மீது வழக்கு

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராஜா பீமாராவ் 53. இவர் மூன்றாந்தல் பகுதியில் 'அக்ரோ இண்டஸ் கிரெடிட்ஸ் லிமிடெட்' தனியார் நிதி வங்கி நிறுவனத்தில்,

இந்தாண்டு பிப்ரவரி 7ல் 68 கிராம் எடையுள்ள தங்க செயினை அடகு வைத்து ரூ.3.53 லட்சம் கடன் பெற்றார். தலைமை அலுவலகத்திலிருந்து ஆண்டாய்வுக்கு வந்த நகை மதீப்பீட்டாளர்கள் நகைகளின் உண்மைத்தன்மை குறித்து சோதனையிட்டனர். இதில் ராஜா பீமாராவ் அடகு வைத்த தங்க செயின் தரம் குறைவாக போலி என தெரிந்தது. வங்கி கிளை மேலாளர் வேல்முருகன், ராஜா பீமாராவ்வை அலைபேசியில் அழைத்தும் வங்கிக்கு வரவில்லை. போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேல்முருகன் புகாரில், தென்கரை எஸ்.ஐ., கர்ணன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement