பளியன்குடியில் மே 14ல் முகாம்

தேனி: உத்தமபாளையம் தாலுகா மேலக்கூடலுார் பளியன்குடியில் மே 14ல் காலை 10:00 மணிக்கு கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது.

பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, விபத்து நிவாரணம், விவசாயத்துறை, போக்குவரத்துத்துறை தொடர்பான மனுக்களாக வழங்கி தீர்வு காணலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement