கோயில் பொங்கல் விழா

ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பொங்கல் விழா ஏப்ரல் 29ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

மே 6 முதல் 4 நாட்கள் இரவில் சிம்ம வாகனம், அன்ன வாகனம், முத்துப்பல்லக்கு, பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா சென்று அருள் பாலித்தார். பக்தர்கள் பொங்கலிட்டு தீச்சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று கோயில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

Advertisement