வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி போலீஸ் நிலையம் வேண்டும்: திருமா

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
கர்நாடகாவில், வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, தனி போலீஸ் ஸ்டேஷன் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் உருவாக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தில் அண்மையில் நடந்த தேரோட்டத்தின் போது, சிலர் ஜாதி பெயரை சொல்லி இழிவுப்படுத்தி தாக்கியுள்ளனர்.
இதை கண்டித்து வரும், 13ம் தேதி மதியம், 3:00 மணிக்கு புதுக்கோட்டையில் என் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
கோவில் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். அதற்காக திருச்சியில், வரும் 31ல் 'மதச்சார்பின்மை காப்போம்' என்ற மக்கள் எழுச்சி பேரணி நடக்கிறது.
பேரணி என்றால், எந்த கட்சி நடத்தினாலும், போலீசார் உடனே அனுமதி கொடுப்பதில்லை. வன்னியர் சங்க மாநாடு பேரணிக்கும் கூட, ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், நடைமுறையை போலீசார் பின்பற்றுகின்றனர்.
காலனி என்ற சொல், ஜாதியை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடாக உள்ளது. இதை தவிர்க்க வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் இச்சொல்லை அரசு ஆவணங்கள் மற்றும் நடைமுறையில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். அதுவும் வரவேற்கக்கூடியது.
தி.மு.க., ஆட்சியில் உள்ள நிலையில், பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
வரும் சட்டசபை தேர்தலில், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. கட்சியின் அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஏதுவாக எல்லாம் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாக்குதலுக்கு வரவேற்பு!
ஜம்மு - காஷ்மீர் எல்லையோரத்தில் பயங்கரவாத அத்துமீறல்கள் நடந்து, இன படுகொலைகள் நடந்துள்ளன. இது கண்டிக்கத்தக்கது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடக்கும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, பாக்.,கிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது; இதை பாராட்டுகிறோம். ராணுவ நடவடிக்கையை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பங்கேற்கும் பேரணியை அறிவித்துள்ளார். இதையும் வரவேற்கிறோம்.
- திருமாவளவன், தலைவர், வி.சி.,

மேலும்
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்
-
போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை
-
அறத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது தாக்குதல்; அண்ணாமலை பேட்டி