ராமநாதபுரம் கண்மாய், ஊருணிகளில் நீர் இருப்பு! 2ம் போகம் நெல்சாகுபடி பணிகள் ஜரூர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் பெரிய கண்மாய், அதனை சார்ந்த ஊருணி, குளங்களில் தண்ணீர் உள்ளதால் இவ்வாண்டு இரண்டாம் போகம் நெல்சாகுபடி மற்றும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் பெரியகண்மாய் பாசனத்தில் ஆண்டு தோறும் தொருவளூர், கவரங்குளம், பாப்பாக்குடி, புத்தேந்தல், இடையர் வலசை, சூரன்கோட்டை, கொட்டகை, சூரன்கோட்டை காலனி உள்ளிட்ட பகுதிகளில் 3500 ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக சராசரி மழையை விட அதிக மழை பொழிவு காரணமாக விவசாயிகள் 2ம் போகமாக நெல் சாகுபடி செய்கின்றனர். நடப்பு ஆண்டில் மழை பெய்து பரமக்குடி அருகே எட்டிவயல் போன்ற கண்மாய்களில் தண்ணீர் உள்ளது.
குறிப்பாக ராமநாதபுரம் பெரிய கண்மாய், ஊருணிகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் போக நெல்சாகுபடி செய்ய வேளாண்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து சத்திரக்குடி, போகலுார், அச்சுந்தன்வயல், சூரன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்துள்ளனர். இதே போன்று ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில் ஆகிய இடங்களில் நெல் மற்றும் பருத்தி, உளுந்து, பாசிப்பயறு, எள் ஆகியவற்றை 2ம் போகமாக சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் அருகே அச்சுந்தன் பகுதி விவசாயிகள் கூறுகையில், பெரிய கண்மாயில் தண்ணீர் இருப்பதால் 2ம் போகமாக நெல் சாகுபடி 100 ஏக்கரில் நடக்கிறது. கோடை மழைக்கு இயந்திர அறுவடையின் போது சிதறிய நெல் மணிகள் வளர்ந்துள்ளன.
அத்துடன் பலர் உழவு செய்து நெல் விதைப்பு செய்துள்ளனர். கண்மாய், ஊருணி நீருடன் கோடை மழையும் அவ்வப்போது பெய்து வருதால் இவ்வாண்டு இரண்டாம் போக நெல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைக்கும் என்றனர்.
மேலும்
-
ஐ.எம்.எப்., முடிவுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி
-
போர் பதற்றம் எதிரொலி; பயத்தில் பெட்ரோல், டீசல் நிலையங்களை மூடியது பாகிஸ்தான்!
-
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
-
அமிர்தசரஸ் நகருக்கு ரெட் அலர்ட்
-
எந்த இடையூறும் கூடாது: அன்புமணி அறிவுறுத்தல்
-
துரைமுருகன் 'டிஸ்சார்ஜ்'