கனிம கொள்ளையை எதிர்த்த 13 பேர் 'விபத்தில்' உயிரிழப்பு மா.கம்யூனிஸ்ட் ஆதங்கம்

திண்டுக்கல் : மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் சண்முகம் அளித்த பேட்டி:
அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் நிரப்பாமல் நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் பஞ்சமி நிலங்களாக வகைப்படுத்தப்பட்டவைகளை, இதுவரை 1 ஏக்கர் கூட மீட்கப்படவில்லை. நீர்நிலை புறம்போக்கு நிலங்களில், பல தலைமுறைகளாக குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வெளியேற்றப்படுகின்றனர்.
அதேநேரம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு, நீர்நிலை புறம்போக்கு நிலங்களை அரசே ஆக்கிரமித்து வருகிறது. கூட்டணி கட்சி என்பதால், ஆளும் தரப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயம் என சொல்ல முடியாது. போதைப்பொருள் புழக்கம் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது.
மனமகிழ் மன்றங்கள் புதிதாக துவங்கப்பட்டு, டாஸ்மாக் கடை திறக்கப்படாத நேரங்களில், மன்றங்களில் மதுபாட்டில்கள் கிடைக்கும்படி செய்துள்ளனர். இது, சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, ஈரோடு, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர்கள் 13 பேர், சாலை விபத்து வாயிலாக கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பயங்கரவாத முகாம்கள் அழிப்பு; புதிய வீடியோ வெளியிட்டு ராணுவம் விளக்கம்!
-
ராணுவத்திற்கு உதவ தயார்; சண்டிகரில் குவிந்த இளைஞர்கள்!
-
அரசு பள்ளியில் சாதனை
-
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
-
பொய்யான தகவல்களை பரப்பும் பாகிஸ்தான்; வெளியுறவு துறை செயலர் மிஸ்ரி குற்றச்சாட்டு
-
இந்தியா- பாகிஸ்தான் போர் பதட்டம்: தணிக்கும் முயற்சியில் ஆக்கபூர்வமாக செயல்பட சீனா விருப்பம்