கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு காயம்

1

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, 100, வீட்டில் தவறி விழுந்ததில் காயம்அடைந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு, வயது மூப்பு காரணமாக, சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, கழிப்பறை செல்ல எழுந்தபோது, தடுமாறி கீழே விழுந்தார். கட்டிலில் இருந்த இரும்பு தகடு மீது விழுந்ததால், அவரது காதில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று வீடு திரும்பினார். நல்லகண்ணுவுக்கு பல்வேறு கட்ட பரிசோதனை செய்யப்பட்டதில், அச்சப்படும் வகையில் பாதிப்பு எதுவும் இல்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement