போராட்டம் தள்ளிவைப்பு ஜவாஹிருல்லா அறிவிப்பு

சென்னை: 'மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வக்ப் சட்டத்திற்கு எதிராக, இன்றும், 13ம் தேதியும் நடக்கவிருந்த போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது' என, அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், 'அசாதாரணமான சூழலை கருத்தில் வைத்து, வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, இன்று சேலத்திலும், 13ம் தேதி மயிலாடுதுறையிலும் நடக்க இருந்த போராட்டம், தள்ளி வைக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.

Advertisement