இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் யார் யார்? வெளியானது பட்டியல்!

11

புதுடில்லி: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மே 7ம் தேதி இந்திய பாதுகாப்பு படையினர் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

1. தாக்குதலில் பயங்கரவாதி ஹபீஸ் முகமது ஜமீல் கொல்லப்பட்டான். இவனுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்துள்ளது. இவர் மவுலானா மசூத் அசாரின் மூத்த மைத்துனர்.


2. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் முகமது யூசுப் அசார். இவன் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன். மசூத் அசாரின் மைத்துனர். ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டார். ஐசி-814 விமானக் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவன்.


3. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் முகமது ஹசன் கான். இவன் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன். காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதி திட்டங்களை தீட்டி கொடுத்தவன். பயங்கரவாதி முப்தி அஸ்கர் கானின் மகன்.


4. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் காலித். ஜம்மு காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவன். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவன். இவனது இறுதிச் சடங்கில், மூத்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மற்றும் பைசலாபாத் துணை கமிஷனர் கலந்து கொண்டனர்.


5. கொல்லப்பட்ட பயங்கரவாதி பெயர் அபு ஜுண்டால். இவன் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் பொறுப்பாளார். இவனது இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Advertisement