இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் பாகிஸ்தானால் முடியாது; சசி தரூர்

2


திருவனந்தபுரம்: இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் காஷ்மீரை கைப்பற்றும் பாகிஸ்தானின் எண்ணம் தோல்வியில் தான் முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்துள்ளார்.


சவுதி அரசுக்கு சொந்தமான சேனலுக்கு அவர் அளித்த பேட்டி:
ஒரு நிலையான சக்தி கொண்ட இந்தியா, பாகிஸ்தானிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், உயர்தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதிலும், இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை வழங்குவதிலும் தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானை தனித்து விட்டதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது.


காஷ்மீரை கைப்பற்றுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை பாகிஸ்தான் குவித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அதில் தோல்வி தான் கிடைத்துள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி தான்.


போரை நாங்கள் விரும்பவில்லை. ஒருவேளை பாகிஸ்தான் போரை விரும்பினால், அதற்கும் நாங்கள் தயாராகத் தான் இருக்கிறோம். பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போதும், இந்தியா பொறுமையாகத்தான் இருந்தது. இருநாடுகளிடையேயான பதற்றத்தை தணிக்கும் பொறுப்பு இஸ்லமாபாத்திடம் தான் உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement