வியாபாரிகள் சாலை மறியல்

தாராபுரம்: தாராபுரம், அண்ணா நகரில் உழவர் சந்தை செயல்படுகிறது. சந்தைக்கு அருகே பொள்ளாச்சி ரோட்டில் விவசாயிகள் அல்லாத நபர்கள் வெளி நபர்கள் ரோட்டோரம் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால், வியாபாரம் பாதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் நேற்று காலை ரோட்டோரம் இருந்த கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, கடைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற தாராபுரம் போலீசார் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தை முடியும் வரை கடைகளை அகற்ற கூடாது என கூறிய வியாபாரிகள், போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement