போலீஸ் மக்கள் மன்றத்தில் 54 புகார்களுக்கு உடனடி தீர்வு

புதுச்சேரி: கோரிமேடு போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி டி.ஜி.பி., உத்தரவின் பேரில், சனிக்கிழமைகளில் நடந்து வருகிறது.

அதன்படி, நேற்று கோரிமேடு (தன்வந்தரி நகர்) போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், வடக்கு எஸ்.பி., வீரவல்லவன் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், கிழக்கு எஸ்.பி., ரகுநாயகம், காரைக்காலில் சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, வில்லியனுாரில் மேற்கு எஸ்.பி., வம்சீத ரெட்டி, தவளக்குப்பம் தெற்கு எஸ்.பி., பக்தவசலம், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 80 புகார்கள் பெறப்பட்டு, 54 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

Advertisement