புளு ஸ்டார் ஆங்கில பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

வில்லியனுார்: அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி சார்பில், பிளஸ் 2 தேர்வு எழுதிய 208 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பள்ளியில் மாணவி திவ்யா 589 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி விஷ்ணுப்பிரியா 580 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவர் ஆபேல் 579 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

551 மதிப்பெண்களுக்கு மேல் 12 மாணவர்கள், 550 மதிப்பெண்கள் வரை 43 பேர், 450 மதிப்பெண்களுக்கு மேல் 33 பேரும், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இயற்பியல்-1, கணிதம்-2, கணக்கு பதிவியல்-2, கணினி அறிவியல்-7, கணினி பன்பாட்டியல்-2 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழ்-11, பிரெஞ்ச்-4, கணிதம்-11, வேதியியல்-2, உயிரியல்-1, கணினி அறிவியல்-19, கணினிப் பயன்பாட்டியல்-5, வணிகவியல்-3, பொருளியல்-1 மாணவர்கள் 100க்கு 97 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார், பள்ளி முதல்வர் வரலட்சுமி, துணை முதல்வர் சாலை சிவ செல்வம், நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கவுரவபடுத்தி பாராட்டினர்.

Advertisement