கொ.புரத்தில் நீர் மோர் பந்தல் பொதுச்செயலர் இ.பி.எஸ்., திறப்பு


இடைப்பாடி, தமிழகத்தில் வெயில் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அ.தி.மு.க., சார்பில் அனைத்து இடங்களிலும் நீர்மோர் பந்தல் திறந்து, மக்களுக்கு வழங்க வேண்டும் என, அக்கட்சி பொதுச்செயலர்,
இ.பி.எஸ்., அறிவித்திருந்தார்.
அதன்படி கொங்கணாபுரத்தில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. ஒன்றிய குழு முன்னாள் தலைவர் மணி தலைமை வகித்தார். பொதுச்
செயலர், இ.பி.எஸ்., நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு தர்பூசணி, மோர், இளநீர், குளிர்பானங்களை வழங்கினார். இதில், கொங்கணாபுரம் ஒன்றிய செயலர் ராஜேந்திரன், பேரூர் செயலர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜா, சேலம் புறநகர் மாவட்ட மாணவர் அணி துணைத்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement